புனித ஜார்ன் தேவாலயத்தில் ராணி எலிசபெத் உடல் அடக்கம் செய்யப்பட்டது

Queen Elizabeth II
By Irumporai Sep 19, 2022 05:17 PM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

இங்கிலாந்து நாட்டின் ராணி 2-ம் எலிசபெத் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். அவர் தனது 96-வது வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

ராணி எலிசபெத்

அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்தனர். ஸ்காட்லாந்தில் இருந்து விமானம் மூலம் 2-ம் எலிசபெத்தின் உடல் கடந்த 13-ந்தேதி இங்கிலாந்து சென்றடைந்தது.

புனித ஜார்ன் தேவாலயத்தில்  ராணி எலிசபெத் உடல் அடக்கம் செய்யப்பட்டது | Queen Elizabeth Westminster Abbey

லண்டனில் ராணி எலிசபெத்தின் உடலை இங்கிலாந்து மன்னர் சார்லசும், ராணி கமிலாவும் பெற்றுக்கொண்டனர். விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் 2-ம் எலிசபெத்தின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

புனித ஜார்ன் தேவாலயத்தில்  ராணி எலிசபெத் உடல் அடக்கம் செய்யப்பட்டது | Queen Elizabeth Westminster Abbey

இந்த நிலையில் ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கானது முடிந்த நிலையில் தற்போது ராணியின் உடலானது லண்டனில் ராணி எலிசபெத்தின் உடலை இங்கிலாந்து மன்னர் சார்லசும், ராணி கமிலாவும் பெற்றுக்கொண்டனர்.

உடல் நல்லடக்கம்

விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் 2-ம் எலிசபெத்தின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில் ராணியின் உடல் அவரது உடல் புனித ஜார்ன் தேவாலயத்தில் நல்லடக்கம் செய்யப்படது.    

ராணிக்காக செய்யப்பட்டுள்ள சவப்பெட்டி ஓக் மரத்திலால் ஆனது. இது 30 ஆண்டுகளுக்கு முன்னரே வடிவமைக்கப்பட்டது. இதில் காரியம் கோட்டிங் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த காரியம் இறந்தவர்களின் உடலை பாதுகாக்க பயன்படுத்தப்படுகிறது.

டைட்டாக மூடப்படும் சவப்பெட்டியில் ஈரப்பதம் ஏற்படாத வண்ணம் பாதுகாக்கிறது. இதே பாணிதான் இளவரசர் பிலிப்பின் உடல் வைக்கப்பட்டுள்ள சவப்பெட்டியிலும் பின்பற்றப்பட்டுள்ளது.

அந்த சவப்பெட்டியில் ராணியின் தனிப்பட்ட கொடி, ராணியின் கிரீடத்தில் சிலுவை பொருத்தப்படட வட்டமான உருண்டை, செங்கோல் ஆகியவையும் வைக்கப்படும்

இந்த உருண்டையானது ராணி முடிசூட்டி கொண்ட போது கொடுக்கப்பட்டது. இது 300 ஆண்டுகள் பழமையானது. ராணிக்கான அதிகாரமானது கடவுளிடம் இருந்து பெறப்பட்டது என்பதை அந்த உருண்டையில் உள்ள சிலுவை நினைவுப்படுத்தும்.

கோஹினூர் வைரம் உள்ள ராணியின் கிரீடத்தை சார்லஜின் மனைவி கமீலா அணிந்து கொள்வார்.