ராணி எலிசபெத்தின் உடல் யாருடைய உடல் அருகில் வைக்கப்பட உள்ளது - இதோ முழு விவரம்
கடந்த 8ம் தேதி உயிரிழந்த ராணி எலிசபெத்தின் உடல் இன்று அடக்கம் செய்யப்பட உள்ளது.
இதையடுத்து இன்று ராணி 2ம் எலிசபெத்தின் இறுதி அஞ்சலியில் பல்வேறு உலக தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
ராணியின் உடல் அடக்கம் செய்யப்படும் கல்லறையில் யாருடைய உடல்கள் எல்லாம் வைக்கப்பட்டள்ளது என்பதை சற்று விரிவாக பார்க்கலாம்.
யாருடைய உடல்கள் எல்லாம் இருக்கு தெரியுமா?
ராயல் வால்ட்டில் உள்ள கல்லறையில் அரச குடும்பத்தைச் சேர்ந்த 25 பேரின் உடல்கள் வைக்கப்பட்டுள்ளது. இதில் இங்கிலாந்து மன்னர்கள், அவர்களது மனைவிகள் மற்றும் குழந்தைகள் ஆகியோர் அடங்குவார்கள்.
மூன்றாம் மன்னர் ஜார்ஜ் மகள் இளவரசி அமெலியா 1810 ஆம் ஆண்டு உயிரிழந்தார் அவருக்கு அப்போதைய வயது 27. இவரின் உடலும் இந்த கல்லறையில் தான் உள்ளது.

மூன்றாம் மன்னர் ஜார்ஜின் சகோதரி இளவரசி அகஸ்டா உடல் இந்த கல்லறையில் தான் உள்ளது.
நான்காம் மன்னர் ஜார்ஜின் மகள் இளவரசி சார்லோட் மற்றும் அவரது இறந்த மகனின் உடல் 1817 ஆம் ஆண்டு இந்த கல்லறையில் வைக்கப்பட்டது.
மூன்றாம் மன்னர் ஜார்ஜின் மனைவி ராணி சார்லோட் 1818-ல் அடக்கம் செய்யப்பட்டார்.
மூன்றாம் மன்னர் ஜார்ஜ் மகன் இளவரசர் எர்னஸ்ட் அகஸ்டஸின் இறந்த மகள் 1818ல் அடக்கம் செய்யப்பட்டார்.
1820 ஆம் ஆண்டில் மூன்றாம் மன்னர் ஜார்ஜ் மற்றும் இளவரசர் எட்வர்ட், கென்ட் டியூக் ஆகியோர் இங்கு அடக்கம் செய்யப்பட்டார்.
ஜார்ஜ் மூன்றாம் மன்னரின் மகன்கள் ஆன இளவரசர் ஆல்ஃபிரட் 1782ல் இந்த கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.
1783ல் உயிரிழந்த மற்றொரு இளவரசர் ஆக்டேவியஸ் உடலும் இங்கு தான் அடக்கம் செய்யப்பட்டது.
வில்லியம் 4 ஆம் மன்னரின் மகள் இளவரசி எலிசபெத் 1821ல் இங்கு வைக்கப்பட்டார்.
1830 ஆம் ஆண்டு இறந்த 4 ஆம் மன்னர் ஜார்ஜ் மற்றும் 1837 ஆம் ஆண்டு இறந்த 4ம் மன்னர் வில்லியம் ஆகியோர் இந்த ராயல் வால்டில் தான் அடக்கம் செய்யபட்டனர்.
1840 ஆம் ஆண்டு இளவரசி சோபியா
வில்லியம் 4ஆம் மன்னரின் மனைவி ராணி அடிலெய்டு 1849ல் இங்கு அடக்கம் செய்யப்பட்டது.
விக்டோரியா மகாராணி பேரன் ஷெல்ஸ்விக் ஃபிரெட்ரிக் 1876ல் அடக்கம் செய்யப்பட்டார்.
ஜார்ஜ் 3ம் மன்னரின் பேரன் உடல் மற்றும் மன்னர் ஜார்ஜ் 4ஆம் மன்னரின் பேத்தி உடல் ஹனோவரின் இளவரசி ஃப்ரெடெரிகா 1927ல் இந்த கல்லறையில் தான் அடக்கம் செய்யப்பட்டது.
1900-ல் இளவரசர் அடோல்ஃபஸ், மற்றும் 1930ல் இவரது மனைவி உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இளவரசர் ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் உடல் கடந்த 2021 ஆண்டு இங்கு அடக்கம் செய்யப்பட்டது. தற்போது ராணியின் உடலும் இங்கு தான் அடக்கம் செய்யப்பட உள்ளது.
ராணியின் உடல் அவரின் கணவரின் உடல் அருகில் அடக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.