விலை உயர்ந்த நகையுடன் அடக்கம் செய்யப்படும் ராணி எலிசபெத் உடல்
மறைந்த பிரிட்டன் ராணி எலிசபெத் உடல் விலை உயர்ந்த நகையுடன் அடக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கணிப்புகளை வெளியிட்டுள்ளார் நிபுணர் ஒருவர்.
நகையுடன் உடல் அடக்கமா
கடந்த 8 ஆம் தேதி பிரிட்டனின் இரண்டாவது ராணி எலிசபெத் 96 வயதில் காலமானார்.அவருக்கான இறுதி சடங்குகள் வரும் 19ஆம் தேதி நடைபெறும் என பக்கிஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அவரின் உடல் தற்போது பக்கிஹாம் அரண்மனையில் வைக்கப்பட்டுள்ளது. ராணி எலிசபெத் உடல் நல்லடக்கம் செய்யப்படும் போது கண்டிப்பாக சிறப்பு வாய்ந்த நகையுடன் அவர் அடக்கம் செய்யப்படுவார் என லிசா லெவின்சன் கணித்துள்ளார்.
இந்த தகவலை அரண்மனை வட்டாரத்தில் இருந்து வெளியிடவும் வாய்ப்புள்ளது. அல்லது வெளியிடாமல் ரகசியமும் காக்கப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எலிசபெத்தின் விலை உயர்ந்த நகைகள்
ராணியின் நிச்சயதார்த்த மோதிரம் இனி இளவரசியான ஆனி வசம் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் ராணியிடம் உள்ள நகைகள் குறித்தான தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.

அவரிடம் 300 பொருட்கள் இருக்க வாய்ப்புள்ளது. இதில் 98 உடை ஊசிகள், 46 நெக்லஸ்கள், 34 ஜோடி காதணிகள், 15 மோதிரங்கள், 14 கையில் அணியும் வாட்ச், மற்றும் 5 பதக்கங்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் ராணி எலிசபெத் பயன்படுத்தி வந்த கிரீடம் மற்றும் செங்கோல் உள்ளிட்டவையும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.