ராணி எலிசபெத் இறுதிச்சடங்கு : பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு
Queen Elizabeth II
Death
By Irumporai
இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் (96), உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்தனர்.
எலிசபெத் மரணம்
ராணி எலிசபெத் மறைவு குறித்த செய்தி அறிந்ததும் இங்கிலாந்து மக்களும், உலக தலைவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். ராணியின் உடல் பக்கிங்காம் அரண்மனைக்கு கொண்டு வரப்படுகிறது.

இறுதி ஊர்வலம்
லண்டனில் ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏராளமான மக்கள் பக்கிங்காம் அரண்மனை முன் திரண்டுள்ளனர். இந்நிலையில், ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு வரும் 19-ம் தேதி நடைபெறும் என பக்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது.