இங்கிலாந்து ராணி எலிசெபத் உடல்நிலை கவலைக்கிடம் - உலகத் தலைவர்கள் பிரார்த்தனை
இங்கிலாந்து ராணி எலிசெபத் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராணியாக ராணி எலிசெபத்
இங்கிலாந்து நாட்டில் உள்ள பக்கிங்காம் மாளிகையில் லண்டன் இங்கிலாந்து மகாராணியாக ராணி எலிசெபத் வாழ்ந்து வருகிறார். அவருக்கு தற்போது 96 வயதாகிறது.
திடீரென்று அவருக்கு இன்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, எலிசெபத் மகாராணியின் அதிகாரப்பூர்வன மருத்துவக்குழுவினர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இச்செய்தி வெளியாகி இங்கிலாந்து நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேல்ஸ் இளவரசர், கமிலா மற்றும் கேம்பிரிட்ஜ் பிரபு ஆகியோர் 96 வயதான ராணியுடன் இருக்கின்றனர். எலிசெபத் ராணி விரைவில் குணம்பெற வேண்டி, உலகத்தலைவர்கள் பிரார்த்தனை செய்து வருவதாக சமூகவலைத்தளங்கள் வாயிலாக தெரிவித்துள்ளனர்.

A statement from Buckingham Palace:https://t.co/2x2oD289nL
— The Royal Family (@RoyalFamily) September 8, 2022