ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கு - பேரக்குழந்தைகள் மரியாதை செலுத்தினர்...!
ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் பேரக்குழந்தைகள் மரியாதை செலுத்தி மவுன அஞ்சலி செலுத்தினர்.
இங்கிலாந்து ராணி எலிசெபத் மறைவு
இங்கிலாந்து மகாராணியாக வாழ்ந்து வந்த ராணி எலிசெபத் (96) உடல்நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி கடந்த 8ம் தேதி உயிரிழந்தார். இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
ஆபரேஷன் யூனிகார்ன்
இங்கிலாந்து ராணி ஸ்கார்ட்லாந்தில் இறந்ததால் ஆபரேஷன் யூனிகார்ன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 'ஆபரேஷன் யூனிகார்ன்' என்பது ராணி எலிசபெத் இறந்த நாளிலிருந்து அடுத்த 10 நாட்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும் திட்டமாகும். ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள் மறைந்த பிரிட்டன் ராணி எலிசபெத்தின் உடல் பக்கிங்காம் அரண்மனை வந்தடைந்தது.
அரண்மனையில் 24 மணிநேரம் உடல் வைக்கப்பட உள்ளது. பிறகு வெஸ்ட்மின்ஸ்டரில் மக்கள் அஞ்சலிக்காக 3 நாட்கள் வைக்கப்படும். ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள் வரும் 19-ம் தேதி நடைபெற இருக்கிறது. வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கு அருகில் ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பல லட்சத்திற்கு அதிகமாக மக்கள் குவிந்து வருகின்றனர்.
பேரக்குழந்தைகள் அஞ்சலி
ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் பேரக்குழந்தைகள் மரியாதை செலுத்தி மவுன அஞ்சலி செலுத்தினர்.
வேல்ஸ் இளவரசர் மற்றும் இளவரசி ஆகியோர் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனைக்குள் படுத்திருக்கும் ராணி எலிசபெத்திற்கு மரியாதை செலுத்தினார்கள்.
இதனையடுத்து, லேடி லூயிஸ் வின்ட்சர் தனது சகோதரர் ஜேம்ஸ், விஸ்கவுன்ட் செவெர்னுடன் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் 2-வது ராணி எலிசபெத்தின் சவப்பெட்டியின் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
ஜேம்ஸ் லூயிஸ் ராணியின் இளைய பேரக்குழந்தை அஞ்சலி செலுத்தினார்.
தற்போது இது குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
The Prince and Princess of Wales pay their respects inside the Palace of Westminster for the Lying-in State of Queen Elizabeth II ?? pic.twitter.com/hKsGFWLXzv
— Theroyalfamily.wcgcl ? (@lovewalesfamily) September 14, 2022
You mean like this ? pic.twitter.com/5os4FqVriz
— Elizabeth Daley (@Elizabe88508545) September 14, 2022
Lady Louise Windsor with her brother James, Viscount Severn attend the service for the reception of Queen Elizabeth II's coffin at Westminster Hall, in the Palace of Westminster. James & Louise are the Queen’s youngest grandchildren.@dagmar_Marie77 @Remisagoodboy pic.twitter.com/sKV704srHa
— Remoulade Sauce (@Remisagoodboy) September 14, 2022