பிரீமியர் லீக் போட்டியின்போது அரங்கில் எலிசபெத் ராணிக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது - வைரலாகும் வீடியோ

Queen Elizabeth II Death
By Nandhini Sep 15, 2022 09:10 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

நேற்று நடைபெற்ற பிரீமியர் லீக் போட்டியின்போது 2-ம் எலிசபெத் ராணிக்கு அரங்கில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்ட வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்து ராணி எலிசெபத் மறைவு

இங்கிலாந்து மகாராணியாக வாழ்ந்து வந்த ராணி எலிசெபத் (96) உடல்நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி கடந்த 8ம் தேதி உயிரிழந்தார். இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

ஆபரேஷன் யூனிகார்ன்

இங்கிலாந்து ராணி ஸ்கார்ட்லாந்தில் இறந்ததால் ஆபரேஷன் யூனிகார்ன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 'ஆபரேஷன் யூனிகார்ன்' என்பது ராணி எலிசபெத் இறந்த நாளிலிருந்து அடுத்த 10 நாட்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும் திட்டமாகும்.

ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள்

மறைந்த பிரிட்டன் ராணி எலிசபெத்தின் உடல் பக்கிங்காம் அரண்மனை வந்தடைந்தது. அரண்மனையில் 24 மணிநேரம் உடல் வைக்கப்பட உள்ளது. பிறகு வெஸ்ட்மின்ஸ்டரில் மக்கள் அஞ்சலிக்காக 3 நாட்கள் வைக்கப்படும். ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள் வரும் 19-ம் தேதி நடைபெற இருக்கிறது. வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கு அருகில் ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பல லட்சத்திற்கு அதிகமாக மக்கள் குவிந்து வருகின்றனர்.

queen-elizabeth-death-tribute

பிரீமியர் லீக் போட்டியின்போது எலிசபெத் ராணிக்கு மவுன அஞ்சலி

ராணி எலிசபெத்தின் 70 ஆண்டுகால ஆட்சியைக் கௌரவிக்கும் வகையில் இந்த வார இறுதியில் ஒவ்வொரு பிரீமியர் லீக் போட்டியின்போது 70வது நிமிடத்திலும் ஒரு நிமிடம் கைத்தட்டி, மவுன அஞ்சலி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று ரேஞ்சர்கள் யுஇஎஃப்ஏவை மீறி, எலிசபெத் ராணிக்கு ஒரு நிமிடம் கைத்தட்டி, மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது, அந்நாட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது, அரங்கில் இருந்தவர்கள் தேசிய கீதத்தைப் பாடினார்கள்.

தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.