இங்கிலாந்து மன்னர் சார்லஸை சந்தித்துப் பேசிய ஜனாதிபதி திரௌபதி முர்மு
ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில், 3ம் மன்னர் சார்லஸை ஜனாதிபதி திரௌபதி முர்மு சந்தித்துப் பேசினார்.
இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத்
இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத் (96), கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் ஸ்காட்லாந்திலிருந்து விமானம் மூலம் கடந்த 13-ம் தேதி இங்கிலாந்து சென்றடைந்தது. இதனையடுத்து, லண்டனில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டர் மண்டப மேடையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள ராணியின் உடலுக்கு தொடர்ந்து மக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
3ம் மன்னர் சார்லஸை சந்தித்துப் பேசிய ஜனாதிபதி
லண்டன் சென்றுள்ள இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்தியா சார்பில், ராணி எலிசபெத்தின் நினைவாக இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டு உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கு இன்று நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உட்பட பல உலக நாடுகளின் தலைவர்கள் இங்கிலாந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ராணி எலிசபெத்த்தின் இறுதிச் சடங்கில் 3ம் மன்னர் சார்லஸை சந்தித்து பேசினார். தற்போது இது குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
President #DroupadiMurmu to attend the funeral of Queen Elizabeth II in London today.
— All India Radio News (@airnewsalerts) September 19, 2022
The state funeral of Queen Elizabeth II will take place at Westminster Abbey in London this afternoon. pic.twitter.com/G2PJ739gLu
President #DroupadiMurmu meets #KingCharles111 at the reception hosted by him in the Buckingham Palace. pic.twitter.com/3NzxlFE7Mf
— Mojo Story (@themojostory) September 19, 2022