ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு லண்டன் பயணம்
ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு லண்டன் செல்ல உள்ளார்.
இங்கிலாந்து ராணி எலிசெபத் மறைவு
இங்கிலாந்து மகாராணியாக வாழ்ந்து வந்த ராணி எலிசெபத் (96) உடல்நலக்குறைவால் கடந்த 8ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
நடந்து வரும் 'ஆபரேஷன் யூனிகார்ன்'
இங்கிலாந்து ராணி ஸ்கார்ட்லாந்தில் இறந்ததால் ஆபரேஷன் யூனிகார்ன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஆபரேஷன் யூனிகார்ன் என்பது ராணி எலிசபெத் இறந்த நாளிலிருந்து அடுத்த 10 நாட்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும் திட்டமாகும். தற்போது ‘ஆபரேஷன் யூனிகார்ன்’ நடந்து வருகிறது.
லண்டன் செல்கிறார் குடியரசுத்தலைவர்
இந்நிலையில், வரும் 19ம் தேதி நடைபெறும் ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 3 நாள் பயணமாக வரும் 17ம் தேதி லண்டன் செல்ல இருக்கிறார்.
