மறைந்த ராணி எலிசபெத் - பிரிட்டன் முழுவதும் மக்கள் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி..!
மறைந்த ராணி 2ம் எலிசபெத்திற்கு பிரிட்டன் முழுவதும் மக்கள் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.
இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத்
இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத் (96), கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் ஸ்காட்லாந்திலிருந்து விமானம் மூலம் கடந்த 13-ம் தேதி இங்கிலாந்து சென்றடைந்தது.
இதனையடுத்து, லண்டனில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டர் மண்டப மேடையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள ராணியின் உடலுக்கு தொடர்ந்து மக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து இறுதி அஞ்சலி நிகழ்வானது நடந்து வருகிறது. இதில் பங்கேற்க இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உட்பட பல உலக நாடுகளின் தலைவர்கள் இங்கிலாந்து வந்துள்ளனர்.

பிரிட்டன் முழுவதும் மக்கள் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி
இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கை முன்னிட்டு அவரது நினைவாக பிரிட்டன் முழுவதும் மக்கள் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.
மறைந்த ராணி எலிசபெத் மறைவையொட்டி, இங்கிலாந்து அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க வீடுகள், உள்நாட்டு நிகழ்ச்சிகள் உள்பட பல பகுதிகளில் பங்கேற்றிருந்த மக்கள் ஒரு நிமிடம் ராணி ராணிக்கு மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.