2ம் எலிசபெத் ராணி உடல் இன்று நல்லடக்கம் - மீண்டும் வானில் தோன்றிய வானவில்

Queen Elizabeth II Death
By Nandhini Sep 19, 2022 06:01 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

2ம் எலிசபெத்திற்கு ராணி உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட உள்ள நிலையில், மீண்டும் வானில் தோன்றிய வானவில்லால் மக்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர். 

இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத்

இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத் (96), கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் ஸ்காட்லாந்திலிருந்து விமானம் மூலம் கடந்த 13-ம் தேதி இங்கிலாந்து சென்றடைந்தது.

இதனையடுத்து, லண்டனில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டர் மண்டப மேடையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள ராணியின் உடலுக்கு தொடர்ந்து மக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கு இன்று நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உட்பட பல உலக நாடுகளின் தலைவர்கள் இங்கிலாந்து வந்துள்ளனர்.

வானில் தோன்றிய இரட்டை வானவில்

கடந்த வாரம் ராணி எலிசபெத் இறக்கும் தருணத்தில், பக்கிங்காம் அரண்மனை பகுதியில் இரட்டை வானவில் தோன்றியது. இதைப் பார்த்த இங்கிலாந்து மக்கள் பெரும் உணர்ச்சிபெருக்கில் ஆளானார்கள். அதேபோல் பால்போன் அரண்மனையிலும் வானவில் தோன்றியது. அப்போது கடவுள் இரண்டாம் எலிசபெத் ராணியை பாதுகாத்துள்ளார் என்று மக்கள் நினைத்து கண்ணீரோடு அந்நாட்டின் தேசிய கீதத்தைப் பாடினர்.

மீண்டும் வானவில் தோன்றிய வானவில்

மறைந்த மாட்சிமை ராணி 2ம் எலிசபெத்தின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட உள்ள நிலையில், முன்னதாக வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையின் மீது மிகவும் நம்பமுடியாத மீண்டும் வானில் வானவில் தோன்றியது. இதைப் பார்த்த மக்கள் ஆச்சரியமடைந்தனர்.

தற்போது இது குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.