ராணி எலிசபெத்தின் சவப்பெட்டியை நோக்கி பாய்ந்த நபர் - மடக்கிப் பிடித்து சுற்றிவளைத்த போலீசார் - வைரலாகும் வீடியோ
ராணி எலிசபெத்தின் சவப்பெட்டியை நோக்கி பாய்ந்த நபரை போலீசார் மடக்கிப் பிடித்து தூக்கிச் சென்றனர்.
இங்கிலாந்து ராணி எலிசெபத் மறைவு
இங்கிலாந்து மகாராணியாக வாழ்ந்து வந்த ராணி எலிசெபத் (96) உடல்நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி கடந்த 8ம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து, வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கு அருகில் ராணியின் உடல் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பல லட்ச மக்கள் பல கி.மீ. தொலைவுக்கு நீண்ட வரிசையில் பகல் இரவு பாராமல், மணிக்கணக்கில் கால் கடுக்க காத்து நின்று ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டியை கண்டு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

ராணி சவப்பெட்டி முன் பாய்ந்த நபர்
இந்நிலையில், மக்கள் வரிசையாக ராணி எலிசெபத்திற்கு அஞ்சலி செலுத்திக் கொண்டு வருகிறார். இந்தக் கூட்டத்தில் ஒரு நபர் சட்டென ராணியின் சவப்பெட்டி நோக்கி பாய்ந்து ஓடிச் சென்றார். அப்போது காவலில் இருந்த பாதுகாவலர்கள் அவரை பிடித்து கீழே சாய்ந்து கைகளை மடக்கி அழுத்தினார். இதனையடுத்து, அந்த நபரை பாதுகாவலர்கள் குண்டுக்கட்டையாக தூக்கிச் சென்றனர். இதனால், அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
WATCH: Police tackle man who tried to rush towards Queen Elizabeth's coffin pic.twitter.com/ipuauYbOpA
— BNO News (@BNONews) September 17, 2022