இங்கிலாந்து ராணி எலிசெபத் மறைவு - கடல் அலையாய் காட்சியளிக்கும் மக்கள் கூட்டம் - கண்ணீர் அஞ்சலி

Queen Elizabeth II Death
By Nandhini Sep 17, 2022 12:17 PM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

இங்கிலாந்து ராணி எலிசெபத் மறைவு

இங்கிலாந்து மகாராணியாக வாழ்ந்து வந்த ராணி எலிசெபத் (96) உடல்நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி கடந்த 8ம் தேதி உயிரிழந்தார்.

ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள் மறைந்த பிரிட்டன் ராணி எலிசபெத்தின் உடல் பக்கிங்காம் அரண்மனைக்கு கொண்டு வரப்பட்டது. 

அதையடுத்து வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில ராணியின் உடல், அங்குள்ள மேடையில் வைக்கப்பட்டது. அதுவும் ராஜ மரியாதையுடன், கிரீடத்துடன் வைக்கப்பட்டுள்ளது. வெஸ்ட்மின்ஸ்டரில் மக்கள் அஞ்சலிக்காக 3 நாட்கள் வைக்கப்பட்டுள்ளது. ராணி 2ம் எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள் வரும் 19-ம் தேதி நடைபெற இருக்கிறது.

queen-elizabeth-death

மக்கள் கண்ணீர் அஞ்சலி

வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கு அருகில் ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பல லட்சத்திற்கு அதிகமாக மக்கள் குவிந்து வருகின்றனர். பல கி.மீ. தொலைவுக்கு நீண்ட வரிசையில் பகல் இரவு பாராமல், மணிக்கணக்கில் கால் கடுக்க காத்து நின்று ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டியை கண்டு அவர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

சிலர் ஓரிரு வினாடிகள் நின்று பிரார்த்தனையும் செய்து வருகின்றனர். 24 மணி நேரமும் மக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்வு, வரும் 19-ம் தேதி திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 6.30 மணியுடன் முடிவடைய உள்ளது.