மெர்சி நதியில் 2ம் எலிசபெத் மகாராணிக்கு கடல்சார் அஞ்சலி... - வைரலாகும் வீடியோ
மெர்சி நதியில் 2ம் எலிசபெத் மகாராணிக்கு கடல்சார் அஞ்சலி செலுத்தப்பட்ட வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இங்கிலாந்து ராணி எலிசெபத் மறைவு
இங்கிலாந்து மகாராணியாக வாழ்ந்து வந்த ராணி எலிசெபத் (96) உடல்நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி கடந்த 8ம் தேதி உயிரிழந்தார். இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
ஆபரேஷன் யூனிகார்ன்
இங்கிலாந்து ராணி ஸ்கார்ட்லாந்தில் இறந்ததால் ஆபரேஷன் யூனிகார்ன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
உலக தலைவர்கள் பங்கேற்பு
வரும் 19-ம் தேதி உள்ளுர் நேரப்படி காலை 11 மணிக்கு வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் 2ம் எலிசெபத் ராணியின் இறுதி சடங்கில் அரசு மரியாதை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் உலக நாடுகளின் தலைவர்கள், மிக முக்கிய பிரமுகர்கள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.
கடல்சார் அஞ்சலி
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் மெர்சி நதியில் 2ம் எலிசபெத் மகாராணிக்கு கடல்சார் அஞ்சலி செலுத்தப்பட்டது. தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

A beautiful moment on the River Mersey. A maritime tribute for Queen Elizabeth II… with bagpipes, and river tugs spraying water from their fire cannons. pic.twitter.com/6jQcUvvlCv
— Radio City News (@RadioCityNews) September 14, 2022