ராணி இரண்டாம் எலிசபெத்; குழந்தை பருவம் முதல் அரியணை வாரிசானது வரை... - வைரலாகும் வீடியோ
இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் குழந்தை பருவம் முதல் ராணியாக பதவியேற்றது முதல் வரையிலான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இங்கிலாந்து ராணி எலிசெபத் மறைவு
இங்கிலாந்து மகாராணியாக வாழ்ந்து வந்த ராணி எலிசெபத் (96) உடல்நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி கடந்த 8ம் தேதி உயிரிழந்தார்.
இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
உலக தலைவர்கள் பங்கேற்பு
வரும் 19-ம் தேதி உள்ளுர் நேரப்படி காலை 11 மணிக்கு வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் 2ம் எலிசெபத் ராணியின் இறுதி சடங்கில் அரசு மரியாதை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் உலக நாடுகளின் தலைவர்கள், மிக முக்கிய பிரமுகர்கள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.
வைரலாகும் வீடியோ
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ராணி இரண்டாம் எலிசபெத் குழந்தை பருவம் முதல் அரியணை வாரிசானது வரை அவர் நாட்டுக்காக செய்த சேவையை நினைவுகூர்கிறது.
இந்த வீடியோவைப் பார்த்து வரும் உலக மக்கள் ராணி எலிசபெத்திற்கு அஞ்சலி செலுத்தி கமெண்ட் செய்து வருகின்றனர்.

Queen Elizabeth II, a lifetime of service to her Country, the Commonwealth and the World. pic.twitter.com/iLPtLBRTHW
— Bobbie☀️ (@bo66ie29) September 15, 2022