ராணி 2ம் எலிசெபத் உடல் அடங்கிய சவப்பெட்டி - இப்படி தான் அடக்கம் செய்யப்படுமாம்? வெளியான தகவல்

Queen Elizabeth II Death
By Nandhini Sep 16, 2022 06:23 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

ராணி 2ம் எலிசெபத் உடல் அடங்கிய சவப்பெட்டி அடக்கம் செய்யப்படும் பாரம்பரிய முறைகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

இங்கிலாந்து ராணி எலிசெபத் மறைவு

இங்கிலாந்து மகாராணியாக வாழ்ந்து வந்த ராணி எலிசெபத் (96) உடல்நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி கடந்த 8ம் தேதி உயிரிழந்தார். இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

உலக தலைவர்கள் பங்கேற்பு 

வரும் 19-ம் தேதி உள்ளுர் நேரப்படி காலை 11 மணிக்கு வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் 2ம் எலிசெபத் ராணியின் இறுதி சடங்கில் அரசு மரியாதை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில் உலக நாடுகளின் தலைவர்கள், மிக முக்கிய பிரமுகர்கள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

queen-elizabeth-death

அடக்கம் செய்யும் பாரம்பரிய முறைகள்  - 

வரும் 19ம் தேதி 2ம் எலிசெபத் ராணியின் இறுதி சடங்கில் அரசு மரியாதை நிகழ்ச்சி நடைபெறும். 

2ம் எலிசெபத் ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டிக்கு அரசு மரியாதை செலுத்திய பிறகு, அவரது உடல் லண்டன் நகரத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதி வழியாக குதிரை பூட்டப்பட்ட பீரங்கி வண்டியில் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அருகில் உள்ள வெலிங்டன் ஆர்ச் வரை எடுத்துச் செல்லப்படும்.

இதனையடுத்து, ராணியின் உடல், விண்ட்சார் கோட்டைக்கு அருகேயுள்ள செயிண்ட் ஜார்ஜ் தேவாலயத்துக்கு அர்ப்பணிப்பு பிராத்தனைக்காக எடுத்துச் செல்லப்பட உள்ளது.

இந்த பிரார்த்தனை முடிந்தபிறகு ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டி, 'ராயல் வால்ட்' என்று அழைக்கப்படுகிற விண்ட்சார் கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள அடக்க அறையில் இறக்கப்படும்.

இறுதியாக அரச குடும்பத்தினர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.

அடக்க ஆராதனை, மன்னர் ஆறாம் ஜார்ஜ் நினைவு தேவாலயத்தில் நடைபெறும். இதன் பிறகு, ராணியின் உடலானது, கடந்த ஆண்டு மறைந்த ராணியின் கணவர் இளவரசர் பிலிப் அடக்கம் செய்யப்பட்ட இடம் அருகே நல்லடக்கம் செய்யப்படும்.

ராணி இறுதிச் சடங்கின்போது இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து நாடுகள் முழுவதும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட உள்ளது.