ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் மயங்கி விழுந்த காவலர் - வைரலாகும் வீடியோ
ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் காவலரின் சுழற்சி நடைபெற்றபோது. காவலர் ஒருவர் மயங்கி விழுந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இங்கிலாந்து ராணி எலிசெபத் மறைவு
இங்கிலாந்து மகாராணியாக வாழ்ந்து வந்த ராணி எலிசெபத் (96) உடல்நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி கடந்த 8ம் தேதி உயிரிழந்தார். இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
ஆபரேஷன் யூனிகார்ன்
இங்கிலாந்து ராணி ஸ்கார்ட்லாந்தில் இறந்ததால் ஆபரேஷன் யூனிகார்ன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 'ஆபரேஷன் யூனிகார்ன்' என்பது ராணி எலிசபெத் இறந்த நாளிலிருந்து அடுத்த 10 நாட்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும் திட்டமாகும். ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள் வரும் 19-ம் தேதி நடைபெற இருக்கிறது.
வைரலாகும் வீடியோ
ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் காவலரின் சுழற்சி அஞ்சலி நடைபெற்றபோது, ராணியின் உடலுக்கு அருகில் நின்றுக்கொண்டிருந்த காவலர் ஒருவர் மயங்கி கீழே விழுந்தார். அவரை சக காவலர்கள் மீட்டு அழைத்துச் சென்று முதலுதவி அளித்தனர்.
தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

JUST IN: Guard collapses while Queen Elizabeth II lies in state pic.twitter.com/gEMrYN0NSC
— BNO News (@BNONews) September 14, 2022