ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் சுழற்சி அஞ்சலி.. - வைரலாகும் வீடியோ
ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் காவலரின் சுழற்சி நடைபெறுகிறது.
இங்கிலாந்து ராணி எலிசெபத் மறைவு
இங்கிலாந்து மகாராணியாக வாழ்ந்து வந்த ராணி எலிசெபத் (96) உடல்நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி கடந்த 8ம் தேதி உயிரிழந்தார். இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
ஆபரேஷன் யூனிகார்ன்
இங்கிலாந்து ராணி ஸ்கார்ட்லாந்தில் இறந்ததால் ஆபரேஷன் யூனிகார்ன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 'ஆபரேஷன் யூனிகார்ன்' என்பது ராணி எலிசபெத் இறந்த நாளிலிருந்து அடுத்த 10 நாட்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும் திட்டமாகும்.
ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள்
மறைந்த பிரிட்டன் ராணி எலிசபெத்தின் உடல் நேற்று பக்கிங்காம் அரண்மனைக்கு வந்தடைந்தது. ராணியின் உடல் அரண்மனையில் 24 மணிநேரம் உடல் வைக்கப்பட உள்ளது. பிறகு வெஸ்ட்மின்ஸ்டரில் மக்கள் அஞ்சலிக்காக 3 நாட்கள் வைக்கப்படுகிறது. ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள் வரும் 19-ம் தேதி நடைபெற இருக்கிறது. வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கில் ராணியின் உடலுக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் நேரில் அஞ்சலி செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காவலரின் சுழற்சி அஞ்சலி
இந்நிலையில், ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் காவலரின் சுழற்சி அஞ்சலி நடைபெறுகிறது.
A rotation of the guard takes place in Westminster Hall where Queen Elizabeth II is Lying-in-State.
— Royal Central (@RoyalCentral) September 14, 2022
These take place every 20 minutes.
Guards have 20 minutes on duty, and 40 minutes off duty. pic.twitter.com/rQ2wTHWpR7
A number of police officers who protect the Parliamentary Estate have filed into Westminster Hall at the end of their shift to pay their respects to Queen Elizabeth II. pic.twitter.com/60mE2ndnyJ
— Royal Central (@RoyalCentral) September 14, 2022