ராணி எலிசபெத் மறைவு; அம்மாவின் உடலை காண விமானம் மூலம் வந்த அரசர் சார்லஸ்
ராணி 2ம் எலிசபெத் மறைவிற்கு அஞ்சலி செலுத்துவதற்கக இங்கிலாந்திற்கு விமானம் மூலம் வந்தடைந்தார் அரசர் 3ம் சார்லஸ்.
இங்கிலாந்து ராணி எலிசெபத் மறைவு
இங்கிலாந்து மகாராணியாக வாழ்ந்து வந்த ராணி எலிசெபத் (96) உடல்நலக்குறைவால் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
தொடங்கியது 'ஆபரேஷன் யூனிகார்ன்'
இங்கிலாந்து ராணி ஸ்கார்ட்லாந்தில் இறந்ததால் ஆபரேஷன் யூனிகார்ன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஆபரேஷன் யூனிகார்ன்என்பது ராணி எலிசபெத் இறந்த நாளிலிருந்து அடுத்த 10 நாட்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும் திட்டமாகும். நேற்று இறந்த இங்கிலாந்து ராணியின் உடல் லண்டனுக்கு திரும்ப இருக்கிறது.
ராணி மறைவுக்கு எம்.பி.க்கள் இரங்கல்
ராணி எலிசபெத் மறைவை தொடர்ந்து இங்கிலாந்து நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்நாட்டு நாடாளுமன்ற எம்.பி.க்கள் ராணி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பேசி வருகின்றனர்.

விமானம் மூலம் வந்த அரசர் 3ம் சார்லஸ்
இந்நிலையில், புதிய மன்னர் சார்லஸ் தன்னுடைய தாயாருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இங்கிலாந்து, எடின்பர்க், பெல்ஃபாஸ்ட் மற்றும் கார்டிஃப் ஆகிய இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து தனது தாயாருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார்.
ராணி இறந்த 4 நாட்களுக்குப் பிறகு, பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்திற்கு ஊர்வலம் நடத்தப்பட உள்ளது. அங்கு அவரது உடல் வைக்கப்படும். முக்கியமான நபர்கள் முதலில் அஞ்சலி செலுத்த உள்ளனர். அதனையடுத்து, பொதுமக்கள் ராணி எலிசபெத்திற்கு அஞ்சலி செலுத்துவார்கள்.
இந்நிலையில், தனது தாய் ராணி 2ம் எலிசபெத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்காக அரசர் 3ம் சார்லஸ் இங்கிலாந்திற்கு விமானம் மூலம் வந்தடைந்தார்.
King Charles III lands in England following death of his mother Queen Elizabeth II. https://t.co/sk1UvBJ1Qs pic.twitter.com/DUhq73euSr
— ABC News (@ABC) September 9, 2022