இங்கிலாந்து ராணி எலிசெபத் மறைவு - டெல்லியில் அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்ட அந்நாட்டு கொடி..!
இங்கிலாந்து ராணி எலிசெபத் மறைவையொட்டி, டெல்லியில் உள்ள பிரிட்டன் தூதரகத்தில் அந்நாட்டின் கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது
இங்கிலாந்து ராணி எலிசெபத் மறைவு
இங்கிலாந்து மகாராணியாக வாழ்ந்து வந்த ராணி எலிசெபத் (96) உடல்நலக்குறைவால் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
அரை கம்பத்தில் அந்நாட்டு கொடி
இந்நிலையில், ராணி 2ம் எலிசபெத் மறைவையொட்டி டெல்லியில் உள்ள பிரிட்டன் தூதரகத்தில் அந்நாட்டின் கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.
பிலிப் - எலிசபெத் தம்பதிக்கு 3 மகன்கள், 1 மகள் என 4 பேர் இருக்கின்றனர். ராணி 2-ம் எலிசபெத் உயிரிழந்ததையடுத்து, அவரது மூத்த மகன் சார்லஸ் இங்கிலாந்தின் புதிய அரசராக பொறுப்பேற்றுள்ளார்.

The British flag at half-mast in Delhi. #QueenElizabethII @AlexWEllis pic.twitter.com/lEYouYF0MH
— Ashoke Raj (@Ashoke_Raj) September 9, 2022