ஜூன் மாதம் அமெரிக்க அதிபரை சந்திக்கும்பிரிட்டன் ராணி.. எதற்காக?
பிரிட்டன் செல்லும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை அந்நாட்டு ராணி இரண்டாம் எலிசபெத் சந்திக்கிறார்.
ஜி 7 உச்சி மாநாடு பிரிட்டனில் வரும் 11ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ள.
இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்தநிலையில் மாநாட்டில் பங்கேற்க பிரிட்டன் செல்லும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை ஜூன் 13 ஆம் தேதி அந்நாட்டு ராணி இரண்டாம் எலிசபெத் சந்திக்க உள்ளார்.
Britain’s Queen Elizabeth will meet U.S. President Joe Biden and First Lady Jill Biden at Windsor Castle on June 13, Buckingham Palace said on Thursday.https://t.co/beuQP3bidz
— Globalnews.ca (@globalnews) June 3, 2021
இதனை பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின் ஜோ பைடன் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.