கல்குவாரி விபத்தில் உயிரிழந்த குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல்

india karnataka states
By Jon Feb 26, 2021 03:18 PM GMT
Report

கர்நாடக மாநிலத்தில் வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார். கர்நாடக மாநிலத்தில் கல்குவாரி வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த மாநிலத்தின் சிக்கபல்லபூர் மாவட்டம் ஹிரங்காவல்லியில் உள்ள கற்குவாரியில் நேற்று இரவு பயங்கர வெடிவிபத்து நிகழ்ந்தது.

இதில் 6 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்துள்ளார். சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் வெடித்து விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், குவாரி விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் காயமடைந்தவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் அவர் கூறி உள்ளார்.