Wow... பஸ்ஸில் மாஸா வலம் வந்த அர்ஜென்டினா வீரர்கள் - துள்ளி குதித்த ரசிகர்கள்...! - வைரல் வீடியோ...!
உலக கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா வீரர்கள் கத்தாரில் திறந்த பஸ்ஸில் வலம் வந்தனர்.
சாம்பியன் பட்டம் கைப்பற்றிய அர்ஜென்டினா
நேற்று முன்தினம் உலக மக்கள் எதிர்பார்த்த 22-வது உலகக் கோப்பை கால்பந்து - 2022 போட்டியில், இறுதி சுற்றில் நடப்பு சாம்பியன் பிரான்ஸை பெனால்டி ஷூட்-அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா உலகக்கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டத்தை பெற்று வரலாறு சாதனைப் படைத்துள்ளது.
திறந்த பஸ்ஸில் வலம் வந்த அர்ஜென்டினா வீரர்கள்
இந்நிலையில், உலகக் கோப்பை சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா அணியினர் வெற்றியை கொண்டாட இறுதிப்போட்டி நடைபெற்ற லுசைல் மைதானத்தில் வெளியே திறந்த வெளி பஸ்ஸில் வலம் வர ஏற்பாடு செய்யப்பட்டது.
இதனையடுத்து, அணியின் சீருடையுடன் பஸ்சில் ஏறிய அர்ஜென்டினா அணி வீரர்கள் ஆட்டம் போட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அங்குள்ள ரோட்டில் இருபுறமும் திரண்ட ரசிகர்கள் வீரர்களுக்கு பார்த்து கையசைத்து உற்சாகமாக துள்ளி குதித்து வாழ்த்து தெரிவித்தனர்.
தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
?3:30 a.m. in Argentina but the people are outside their homes to welcome the World Champions!pic.twitter.com/FSG6tlNgXs
— infosfcb (@infosfcb) December 20, 2022
03:30 in Argentina right now and that’s how things look like as players are going to Ezeiza camp ?? pic.twitter.com/YW98S56qDh
— Foysal Hossain ????? (@FoysalH301) December 20, 2022
It's 3:30 am in Argentina. World champions.pic.twitter.com/HXtBKAyCI6
— Roy Nemer (@RoyNemer) December 20, 2022