கூரையை உடைத்து வீட்டினுள் விழுந்த 80 கிலோ மலைப்பாம்பு - வைரலாகும் வீடியோ

Viral Video Malaysia Snake
By Karthikraja Dec 06, 2024 09:32 PM GMT
Karthikraja

Karthikraja

in உலகம்
Report

80 கிலோ மலைப்பாம்பு கூரையை உடைத்து வீட்டினுள் விழுந்த வீடியோ வைரலாகி வருகிறது.

மலைப்பாம்பு

மலேசியாவின் காமுண்ட்டிங் நகரில் உள்ள கம்பங் டியூவில் ஒரு வீட்டில் தீடீரென மேற்கூரையைப் உடைத்துக்கொண்டு பாம்பு ஒன்று விழுந்தது. 

malaysia python

பாம்பு விழுந்ததை பார்த்து அதிர்ந்த அந்த வீட்டில் உள்ளவர்கள், 5 மீட்டர் நீளம் கொண்ட 80 கிலோ மலைப்பாம்பு சோபா மீது விழுந்து நகரத் தொடங்கியது.

பிடிபட்ட பாம்பு

அதை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாக மலேசியாவின் சிவில் பாதுகாப்பு நிறுவனத்திற்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற குழுவினர், அந்த வீட்டின் மேற்கூரையை சற்று உடைத்து அந்த பாம்பை பிடித்தனர். 

malaysia python

பின்னர் அந்த பாம்பு உரிய பராமரிப்புக்காக வனவிலங்கு மற்றும் தேசிய பூங்கா துறைக்கு அனுப்பப்பட்டது. இந்த பாம்பானது, அருகிலுள்ள எண்ணெய் பனை தோட்டத்தில் இருந்து வந்ததாக நம்பப்படுகிறது. 

அந்த மலைப்பாம்பு வீட்டுக்கூரையில் இருந்து சோபாவின் மீது இறங்கும் வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இவ்வளவு பெரிய பாம்பை பார்த்ததே இல்லை என நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.