கழிவறையில் அமர்ந்திருந்த நபர்..பாம்பால் நொடியில் நடந்த சம்பவம்!
கழிவறையில் அமர்ந்திருந்த ஒருவரின் பிறப்புறுப்பை 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்து
தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர் தனத் தங்தேவனோன். இவர் கடந்த ஆக.20ஆம் தேதி தனது வீட்டின் கழிவறையைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்.அப்போது திடீர் என்று பிறப்புறுப்பின் விதைப்பைகளில் ஏதோ ஒன்று கடிதத்தை போல் உணர்த்த அவர் , உடனே கழிவறைக்குள் கையை விட்டுப் பார்த்துள்ளார்.
அப்போது கையில் 12 அடி மலைப்பாம்பு வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் ,'' அங்கிருந்த குளியலறை பிரஷை வைத்து அந்தப் பாம்பின் தலையிலேயே அடித்துள்ளார் .இதனால் அந்த பாம்பு உயிரிழந்தது. இந்தச் சம்பவத்தால் கழிவறையில் காயமடைந்த தனத் தங்தேவனோன் மிகவும் வலி தாங்கமுடியாமல் கதறியுள்ளார்.
மலைப்பாம்பு
இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். இந்தச் சம்பவம் குறித்து ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பேசிய தனத் தங்தேவனோன்,"நல்ல வேளை அது வெறும் மலைப்பாம்பு. இதுவே நாகமாக இருந்திருந்தால் அது என்னைக் கொன்றிருக்கும்" என்றார்.
மலைப்பாம்பு விஷத்தன்மை உடையது இல்லை என்பதால், எவ்விதத் தையலும் இன்றி தனத் தப்பித்தார். வெறும் TT தடுப்பூசி மட்டும் செலுத்தப்பட்டு வீடு திரும்பியதாகத் தெரிவித்தார்.
மேலும் பிறப்புறுப்பைக் கடித்த 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு புகைப்படத்தைச் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் . தற்பொழுது அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.