“அனைவருக்கும் நன்றி” - வெற்றி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட பி.வி.சிந்து

badminton pv sindhu tokyo olympics 2020
By Petchi Avudaiappan Aug 03, 2021 07:57 PM GMT
Report

 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்றது மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருப்பதாக இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தெரிவித்துள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்துவரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், பேட்மிண்டன் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்று புதிய சாதனைப் படைத்தார். தொடர்ந்து இரு ஒலிம்பிக் போட்டிகளில் பேட்மிண்டன் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்னும் சிறப்பையும் அவர் பெற்றார்.


இதனிடையே நாடு திரும்பிய பி.வி.சிந்துவுக்கு டெல்லி விமான நிலையத்தில் மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன்.

என்னை ஆதரித்து ஊக்குவித்த பேட்மிண்டன் சங்கம் உட்பட அனைவருக்கும் நான் நன்றி கூறுகிறேன். இது மகிழ்ச்சியான தருணம் என தெரிவித்தார்.