தியேட்டரில் படம் பிடிக்கவில்லையா? பாதியில் எழுந்து சென்றாலும் Refund கிடைக்கும்

Tamil Cinema India Bollywood Hollywood Movies
By Karthikraja Dec 21, 2024 04:00 PM GMT
Karthikraja

Karthikraja

in சினிமா
Report

திரையரங்குகளில் படம் பார்க்கும் நேரத்திற்கு மட்டும் கட்டணம் செலுத்தும் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது.

திரையரங்கு

3 மணிநேரம் சந்தோசமாக பொழுதை கழிக்க திரையரங்குகளுக்கு சென்றால் சில படங்கள் பார்வையாளர்கள் எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது. கட்டணம் செலுத்தி டிக்கெட் வாங்கி விட்டதால் எப்போது படம் முடியும் என வேண்டா வெறுப்பாக திரையரங்கில் அமர்ந்திருப்பார்கள். 

sleeping in theatre

இந்நிலையில் திரையரங்கில் எவ்வளவு நேரம் படம் பார்க்கிறோமோ அதற்கு மட்டும் கட்டணம் செலுத்தும் வகையிலான திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது. 

இனி 24 மணி நேரமும் தியேட்டர்களில் படம் ஓடுமா? திரையரங்க உரிமையாளர்கள் சொல்வது என்ன?

இனி 24 மணி நேரமும் தியேட்டர்களில் படம் ஓடுமா? திரையரங்க உரிமையாளர்கள் சொல்வது என்ன?

10% கூடுதல் கட்டணம்

கடந்த 2023 ஆம் முதல் இந்தியாவின் முன்னணி திரையரங்கமான PVR மற்றும் INOX இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சோதனை அடிப்படையில் இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. 

pvr inox flexi show

இந்த திட்டப்படி, AI தொழில்நுட்ப உதவியுடன் திரையரங்கில் உள்ள இருக்கைகள் வீடியோ மூலம் கண்காணிக்கப்படும். இதன் மூலம் பார்வையாளர் எவ்வளவு நேரம் தந்து இருக்கையில் அமர்ந்து படம் பார்த்துள்ளார் என அறிய முடியும். அவர் படம் பார்த்த நேரத்தை பொறுத்து மீதமுள்ள பணம் திருப்பியளிக்கப்படும்.

ஆனால் இந்த சலுகையை பெற வழக்கமான டிக்கெட் கட்டணத்தை விட 10% கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் இந்த திட்டம் சோதனை அடிப்படையில். டெல்லி மற்றும் குருகிராம் பகுதிகளில் சில தேர்ந்தெடுக்கப்பட்ட திரையரங்குகளில் சில காட்சிகளுக்கு மட்டும் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது.