திருப்பதி ஏழுமலையானை தரிசித்த ஒலிம்பிக் மங்கை பிவி சிந்து

pv sindhu
By Fathima Aug 13, 2021 10:25 AM GMT
Report

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிவி சிந்து இன்று சாமி தரிசனம் செய்தார்.

நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்தார் பிவி சிந்து.

இதன்மூலம் ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற வீராங்கனை என்ற பெருமையும் பெற்றார்.

இவருக்கு பாராட்டுகளும், பரிசுகளும் குவிந்து வரும் நிலையில், இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.

இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த போது, விசாகப்பட்டினத்தில் விரைவில் அகாடமி ஒன்றை தொடங்கப்போவதாகவும், இதன் மூலம் விளையாட்டில் பின்தங்கியுள்ள இளைஞர்களுக்கு உதவப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.