சென்னை புழல் - செம்பரம்பாக்கம் ஏரிகளிலிருந்து வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறப்பு...!
சென்னை புழல் - செம்பரம்பாக்கம் ஏரிகளிலிருந்து வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
தமிழகத்தில் கனமழை
வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளது தமிழகத்தில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து, தமிழகத்தில் 20 மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவிலிருந்து சென்னையில் பெய்து வரும் மழையால் பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகள் வெள்ள நீரில் வாகனத்தை இயக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். சென்னை புளியந்தோப்பு, தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மழை நீர் தேங்கி நிற்கிறது. சாலைகள் படுமோசமாக உள்ளதால் மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
செம்பரம்பாக்கம் ஏரி
இன்று காலை செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து இன்று மதியம் வினாடிக்கு 100 அடி கனஅடி நீர் வெளியேற்றப்படும் என்று காஞ்சிபுரம் ஆட்சியர் ஆர்த்தி அறிவித்தார்.
இதுகுறித்து காஞ்சிபுரம் ஆட்சியர் ஆர்த்தி கூறுகையில், தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வருகிறது.இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது ஏரியில் நீர்வரத்து வினாடிக்கு 1180 கனஅடியாக உள்ளது. இதனால், இன்று மதியம் வினாடிக்கு 100 அடி கனஅடி நீர் திறந்து விடப்பட உள்ளது என்றார்.
நீர் திறப்பு
இந்நிலையில், இன்று மதியம் 3 மணிக்கு சென்னை புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளிலிருந்து வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
Following rains lashing out TN districts and Chennai in particular, the authorities have informed water would be released from Chembarambakkam and Puzhal reservoirs today at 3 PM.#chennairains #Chembarambakkamlake #PuzhalLake #waterreleasehttps://t.co/thGqXbIZQ6
— DT Next (@dt_next) November 2, 2022