இது ரயிலா இல்ல பங்களாவா? அதிபரின் சொகுசு ரயில் - வாயைப் பிளக்க வைக்கும் வசதிகள்!

Vladimir Putin Russian Federation
By Sumathi Jul 10, 2023 06:32 AM GMT
Report

அதிபர் புதினின் தனிப்பட்ட பாதுகாப்பு ரயில் வசதிகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சொகுசு ரயில்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் பிரத்யேக ரயில் தொடர்பான தகவம் அனைவரையும் பிரமிக்க வைக்கிறது. அந்த பிரமாண்டமான பாதுகாப்பு ரயிலில் அதிபருக்கென தனித்தனியாக 22 பெட்டிகள் பிரிக்கப்பட்டு

இது ரயிலா இல்ல பங்களாவா? அதிபரின் சொகுசு ரயில் - வாயைப் பிளக்க வைக்கும் வசதிகள்! | Putins Luxury Armored Train Fitted Saloon Gym

பலதரப்பட்ட உணவகங்கள், கார் நிறுத்துமிடம், அழகு நிலையங்கள், விளையாட்டு அறைகள், ஓய்வெடுக்கும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஹாமம் என சொல்லப்படும் 3.75 மில்லியன் மதிப்புடைய ஸ்பா வசதியுடன் கூடிய குளியலறை தனிச் சிறப்பு பெற்றுள்ளது.

அசத்தல் வசதிகள்

அத்துடன் வாசனை திரவியங்களால் ஆன ஃபோம் பெட்டும் அமைக்கப்பட்டுள்ளது. சுவாசப் பயிற்சிக்காக வெண்டிலேட்டர்கள், இதய துடிப்பு , உடல் வெப்பம் போன்றவற்றை பரிசோதிக்கும் கருவிகளும் இடம்பெற்றுள்ளன.

இது ரயிலா இல்ல பங்களாவா? அதிபரின் சொகுசு ரயில் - வாயைப் பிளக்க வைக்கும் வசதிகள்! | Putins Luxury Armored Train Fitted Saloon Gym

குறிப்பாக அதிபருக்கான தனி அழகு நிலையம் , மருத்துவ அறை, அனைத்து உபகரணங்களையும் உள்ளடக்கிய ஜிம் போன்ற வசதிகளும் உள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக அதிபர் புதின் பெரும்பாலும் இந்த ரயிலையே பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது.