நேட்டாவுக்கு வார்னிங் கொடுக்கும் ரஷ்யா அதிபர் புதின் - காரணம் என்ன?

ukrain putin RussiaUkraineWar
By Irumporai Mar 06, 2022 04:49 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

உக்ரைன் வான் பரப்பில் மூடினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ரஷ்ய அதிபர் புதின் நேட்டோ நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 11 நாட்களாக கடும் போர் நடைபெற்று வரும் நிலையில் உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக ஐரோப்பாவின் மிகப்பெரிய அணு உலை உக்ரைனில் இருப்பதை அடுத்து அந்த அணு உலை ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

உக்ரைன் வான் பரப்பில் விமானங்கள் பறக்க தடை விதிப்பவர்களும் யுத்தத்தில் பங்கேற்பவர்களாக கருதப்பட்டு அதற்கான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என நேட்டோ நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் புதின் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த எச்சரிக்கையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது