மிக ஆபத்தான விஷத்தை பயன்படுத்தும் ரஷ்ய அதிபர் புதின் - அதிர வைக்கும் தகவல்கள்
எதிரிகளுக்கு பயம் காட்ட மிக ஆபத்தான முடிவை ரஷ்ய அதிபர் புதின் மேற்கொண்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் போர் தொடுத்து வருகிறது. இதற்கு உக்ரைனும் பதிலடி கொடுப்பதால் இருதரப்பிலும் ஏராளமான இழப்புகள் ஏற்பட்டுள்ளது.
இதனால் ரஷ்யா மீது அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளது. பல உலக நாடுகள் போரை நிறுத்தும் படி ரஷ்யாவிடம் கேட்டுக் கொண்டும் அதிபர் புதின் அதனை பொருட்படுத்தவேயில்லை.
மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை எதிர்த்தாலும் அந்நாட்டிடம் இருந்து எரிபொருட்களை இறக்குமதி செய்து வருவதால் புதின் தைரியமாக உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறார்.
இந்நிலையில் புதின் தன் எதிரிகளை கொல்வதற்கு உலகில் அதிகம் ஆபத்தான விஷம் ஒன்றை பயன்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.ஸ்ட்ரைக்னைன் என்று பெயர்கொண்ட அந்த விஷம் அந்நாட்டின் உளவு நிறுவனமான கேஜிபியால் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த விஷம் உடலுக்குள் போனவுடன் பயங்கர வலியை ஏற்படுத்தி எலும்புகள் மற்றும் தசைகளை ஒன்றாக இணைக்கும் பிணைப்பை உடைக்கிறது. இதனால் உடல் முற்றிலும் நடுக்கத்தை ஏற்படுத்தும். மேலும் இந்த விஷம் மிக மெதுவாக செயல்பட்டு பல மணி நேரத்திற்கு பிறகு மனிதர்களை கொல்லும். அவர் சாகும்வரை உடலில் உள்ள தசைகள் தொடர்ந்து வலியை உணர்ந்தபடியே இருக்கும்.