முடிவுக்கு வரும் உக்ரைன் போர்? - ரஷ்யா விதித்துள்ள நிபந்தனைகள் என்னென்ன?
உக்ரைன் நாட்டில் ரஷ்யா தொடுத்துள்ள போர் உச்சமடைந்த நிலையில் அதிபர் புதின் போரை முடிவுக்கு கொண்டு வர சில நிபந்தனைகள் விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் தற்போது நேட்டோ கூட்டமைப்புடன் சேர்வதற்கான அனைத்து பணிகளையும் செய்து வருகிறது. இதனால் தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என கூறி ரஷ்யா உக்ரைன் மீது 5 நாட்களாக போர் தொடுத்து வருகிறது.
உக்ரைனும் பதில் தாக்குதல் நடத்துவதால் அங்குள்ள பொதுமக்கள் செய்வதறியாது திகைத்துள்ளனர். இந்த போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்திய நிலையில் பெலாரசில் உள்ள கோமல் நகரில் இருநாட்டு பிரதிநிதிகளும் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. அப்போது உலக நாடுகள் தனது சில நிபந்தனைகளை ஒப்புக்கொண்டால் மட்டுமே உக்ரைனில் ராணுவ நடவடிக்கையைக் கைவிடுவது குறித்து சிந்திக்க முடியும் என்று புதின் தெரிவித்துள்ளார்.
அதில் கிரிமியா தீபகற்பத்தின் மீதான ரஷ்ய இறையாண்மையை அங்கீகரிக்க வேண்டும் என்றும் உக்ரைன் நாட்டின் ராணுவ பலம் குறைக்கப்பட வேண்டும் என்றும், உக்ரைன் நடுநிலை நாடாக இருக்க வேண்டும் என்றும் அதிபர் புதின் நிபந்தனைகள் விதித்ததாக கூறப்படுக்