அதிக ராணுவத்திற்கு அவசியமில்லை, உக்ரைனுக்கு பேரிழப்பு - புதின் தகவல்!

Vladimir Putin Ukraine Russia
By Vinothini Jun 14, 2023 05:11 AM GMT
Vinothini

Vinothini

in உலகம்
Report

 ரஷியா மற்றும் உக்ரைன் போரில் உக்ரைனுக்கு இழப்பு அதிகம் என புதின் கூறியுள்ளார்.

எதிர்த்தாக்குதல்

ரஷியா மற்றும் உக்ரைன் போரில் சில நாட்களாக உக்ரைன் எதிர் தாக்குதலை நடத்தியது. அதில் ரஷியா கைப்பற்றிய சில கிராமங்களை மீட்டுள்ளதாக தகவல் வெளியிட்டனர்.

putin-says-that-ukraine-losts-many

ஆனால் தற்போது இருநாட்டு எல்லையில் எங்களது பாதுகாப்பை அதிகரித்து, உக்ரைன் பகுதிகளை இன்னும் அதிக அளவில் கைப்பற்ற ரஷியப்படைகள் முயற்சி மேற்கொள்வார்கள் என்று புதின் கூறியுள்ளார்.


புதின்

இதனை தொடர்ந்து, ரஷிய அதிபரான புட்டின் கூறுகையில், "உக்ரைன் 160 ராணுவ டாங்கிகள், 360-க்கும் மேற்பட்ட ராணுவ வாகனங்களை கடுமையான சண்டையில் தற்போது இழந்துள்ளது.

putin-says-that-ukraine-losts-many

அதேவேளையில் கிவ் பகுதி புதிய தாக்குதலில் ரஷியா 54 டாங்கிகளை மட்டுமே இழந்துள்ளது. இதை உடனடியாக தெளிப்படுத்த முடியாது. உக்ரைன் மக்கள் ஊடுருவல், ரஷியாவின் பெல்கோரோட் எல்லை பிராந்தியத்தில் உக்ரைன் தாக்குதல் போன்றவற்றை ரஷிய தடுத்து நிறுத்தும்.

ரஷியாவை பாதுகாக்கும் வகையில் உக்ரைனில் ஒரு பாதுகாப்பான பகுதியை உருவாக்குவது குறித்து ஆலோசனை செய்வோம். தற்போதைக்கு ராணுவ வீரர்களை அதிக அளவில் குவிக்க வேண்டிய அவசியம் இல்லை.

அப்படி இருந்தால், ரஷியாவின் இலக்கு என்ன என்பதை ஆராய்ந்து அதற்கு ஏற்ப வீரர்கள் அழைக்கப்படுவார்கள். இன்றைய அளவில் அது தேவையில்லை'' என்றும் கூறியுள்ளார்.