ரஷ்யா உக்ரைன் போர் .. அமெரிக்காவின் பேச்சை கேட்க போவதில்லை : ரஷ்ய அதிபர் புதின்

Vladimir Putin Ukraine Russian Federation
By Irumporai Oct 15, 2022 02:32 AM GMT
Report

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி 24-ம் தேதி போர் தொடுத்தது. ஏழு மாதம் கடந்தும் போர் நீடித்து வருகிறது. 

உக்ரைன் ரஷ்யா போர்

இந்த நிலையில்  உக்ரைனில் கைப்பற்றிய கிழக்கு மற்றும் தெற்கே உள்ள 4 பிராந்தியங்களை கடந்த 1-ம் தேதி ரஷ்யாவுடன் இணைத்துக் கொண்டார் அதிபர் புதின்.

BC

இந்நிலையில், ரஷ்ய அதிபர் புதின் கஜகஸ்தான் சென்றிருந்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில்  உக்ரைன் விவகாரத்தில் அமைதி பேச்சுவார்த்தை மூலம் முடிவு காணவேண்டும் என இந்தியாவும், சீனாவும் வலியுறுத்தி வருகிறது.

எங்களுக்கு இந்தியா ஆதரவு

இரு நாடுகளுமே எங்களின் நட்புறவு நாடுகள். அவர்களின் நிலைப்பாட்டை நன்கு உணர்ந்துள்ளேன். இதில் உக்ரைனின் தற்போதைய நிலைப்பாடு என்ன என்பது தெரிய வேண்டியது அவசியம்.

எனவே இந்த விவகாரத்தில் அமைதி பேச்சுவர்த்தைக்கு இந்தியாவும், சீனாவும் தனது ஆதரவை அளித்தன. அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தேவையில்லை என தெரிவித்தார்.