நான் உளறவில்லை நிறைய ஆயுதங்கள் எங்களிடம் இருக்கின்றன : ரஷ்ய அதிபர் புதின் மிரட்டல்
ரஷ்யா உக்ரைன் மீதான தாக்குதலை குறைத்து விட்டது , ஆகவே இனி மீண்டும் போர் மூளாது என உலக நாடுகள் பலவும் நிம்மதி பெரு மூச்சு விட்டன.
உக்ரைன் ரஷ்யா போர்
கடந்த சில நாட்களுக்கு முன்பு உஸ்பெஸ்கிஸ்தானில் பல்வேறு நாடுகளின் மாநாட்டில் பிரதமர் மோடியினை சந்தித்த ரஷ்ய அதிபர் புதின், வெகு சீக்கிரமே உக்ரைன் மீதான போர் முடிவுக்கு வரும் என கூறினார்.

இந்த செய்தி சரவதேச நாடுகளுக்கு ஆறுதல் தரும் செய்தியாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ரஷ்ய தொலைகாட்சிக்கு பேட்டி கொடுத்த புதின் பேச்சு மீண்டும் பரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
புதின் எச்சரிக்கை
தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில் "எங்கள் தேசத்தின் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு ஏதேனும் பங்கம் வந்தால் நாங்கள் எங்கள் மக்களைக் காக்க எல்லா வழிகளையும் கடைபிடிப்போம். ரஷ்யாவிடம் நிறைய ஆயுதங்கள் இருக்கின்றன.

இது வெறும் உளறல்கள் அல்ல. மேற்கு உலகம் ரஷ்யாவை சிதைக்க நினைக்கிறது. அதனாலேயே நாங்கள் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவாகப் பொய்ப் பிரச்சாரம் செய்கின்றது. ஆனால் அவ்வாறாக அறிக்கைகள் விடுவோருக்கு நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
எங்களை அதையும் தாண்டி அழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள் இருக்கின்றன என்று கூறியுள்ளார். மேலும் இது ரஷ்ய அமைச்சர் கூறுகையில் 3 லட்சம் வீரர்களை போரில் ஈடுபடுத்தவுள்ளோம். ஏற்கெனவே ராணுவ வீரர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்களையும் போரில் ஈடுபடுத்துவோம்" என்று கூறியுள்ளார்.
வீடியோ ( கார்டியன் )