ஹாலிவுட் நடிகர் ஸ்டீவனுக்கு ‘நட்பு விருது’ அளித்த ரஷ்ய அதிபர் புடின்...- வைரலாகும் புகைப்படம்...!

United Russia Vladimir Putin Ukraine
By Nandhini Feb 28, 2023 11:00 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

ஹாலிவுட் நடிகர் ஸ்டீவன் சீகலுக்கு ரஷ்ய அதிபர் புடின் ‘நட்பு விருது’ அளித்து கவுரவித்தார். 

 ரஷ்ய அதிபர் புடின் அளித்த  ‘நட்பு விருது’ 

ஹாலிவுட் நடிகர் ஸ்டீவன் சீகலுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேற்று ஸ்டேட் ஆர்டர் ஆஃப் ஃப்ரெண்ட்ஷிப் விருதை வழங்கினார்.

அதிபர் புடின் கையொப்பமிட்ட ஆணையில், "சர்வதேச கலாச்சார மற்றும் மனிதாபிமான ஒத்துழைப்பின் வளர்ச்சிக்கு சீகலின் பெரும் பங்களிப்பு" என்று குறிப்பிட்டு கவுவிக்கப்பட்டது.

ஹாலிவுட் நடிகர் ஸ்டீவன் சீகல், உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை எப்போதும் ஆதரித்து வந்தார். 2014ம் ஆண்டு கிரிமியாவை இணைக்கும் புடினின் முடிவையும் இவர் ஆதரவு தெரிவித்திருந்தார். 

அமெரிக்காவும் ரஷ்யாவும் எப்போதும் பகைமையுடன் இருந்தபோது, சீகல் ரஷ்ய ஜனாதிபதியின் வெளிப்படையான ஆதரவாளராகவே இருந்தார்.

இதனால், 2018ம் ஆண்டு முதல், சீகல் அமெரிக்கா மற்றும் ஜப்பானுடனான மனிதாபிமான உறவுக்காக ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் சிறப்புத் தூதராக அமர்த்தப்பட்டார். 

சீகல் தவிர, முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளரும், ExxonMobil இன் தலைமை நிர்வாக அதிகாரியுமான ரெக்ஸ் டில்லர்சன், தற்போதைய FIFA தலைவர் கியானி இன்ஃபான்டினோ ஆகியோரும் Order of Friendship விருதைப் பெற்றுள்ளனர்.

putin--friendship-award-for-actor-steven-seagal