ஊ சொல்றியா, பாடல் சர்ச்சையானதில் எனக்கு எந்த கவலையும் இல்லை ''- இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்
‘ஊ அன்டவா’ பாடல் சர்ச்சையானதில் எனக்கு கவலை இல்லை” என்றும் தெரிவித்துள்ளார் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்.
அல்லு அர்ஜுன் - ஃபகத் ஃபாசில் - ராஷ்மிகா நடிப்பில் சுகுமார் இயக்கிய ’புஷ்பா’ கடந்த மாதம் 17 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார், அதில் “ஒரு மொழியில் வெற்றியடையும் பாடல்கள் மற்றொரு மொழியில் வெற்றியடையாமல் போகலாம். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகள் எனக்கு தெரியும் என்பதால், எனக்கு இந்த மூன்று மொழிகளிலும் பாடல்களின் அசல் தன்மையை இழக்காமல் கொண்டுவந்தேன்.
மலையாளம் மற்றும் கன்னடத்திற்கு மட்டும் மொழிபெயர்ப்பாளர்களும், பாடலாசிரியர்களும் உதவினார்கள். ஒவ்வொரு வரியையும் சரிபார்த்து அதன் அழகை இழக்காமல் கொண்டுவந்தோம்.
இதற்கே, எனக்கு நீண்ட நேரம் ஆனது. ஐந்து வெவ்வேறு படங்களில் வேலை செய்தது போல் இருந்தது. அந்தளவுக்கு உடல் உழைப்பைக் கொட்டினேன் இதுவும் ஒருவிதமான த்ரில்லிங் அனுபவம்தான். ஆனால், அனைத்து மொழிகளிலும் பாடல்கள் ஹிட் அடித்து பலன் கிடைத்துள்ளது.
’ஊ அன்டவா’ பாடல் சர்ச்சையானது குறித்து கவலை இல்லை. நாங்கள் எங்கள் வேலையைச் செய்துக்கொண்டே இருக்கிறோம். மக்கள் பெரும்பாலான விஷயங்களை சர்ச்சைக்குரியதாக மாற்றுகிறார்கள்” என்று கூறியுள்ளார்.
ஊ அண்டாவா படல் தமிழ் ‘ஊ சொல்றியா’ பாடலாக ஆண்ட்ரியா குரலில் வெளியானது குறிப்பிடத்தக்கது.