இது எப்படி இருக்கு?... - ‘புஷ்பா’ பட ஸ்டைலில் சுரேஷ் ரெய்னா - லைக்குகளை தெறிக்க விடும் ரசிகர்கள்
சுரேஷ் ரெய்னா csk -ல் இடம் பெறாமல் போனது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இப்படிப்பட்ட நிலையில் ஐபிஎல் அணி ஒன்று சுரேஷ் ரெய்னாவுக்கு தங்கள் அணியில் இடம் கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஐபிஎல் சீசனில் புதிய அணியான குஜராத் டைட்டன்ஸ் ஜெர்சியில் உள்ளார்.
இதையடுத்து, சுரேஷ் ரெய்னா ஐபிஎல் 2022ல் நுழையப் போகிறார் என்றும், அவர் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் பெறலாம் என்றும் சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.
ஐபிஎல் தொடரில் இருந்து இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் விலகியதை அடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணியில் சுரேஷ் ரெய்னா இடம் பெறலாம் என்று கூறப்படுகிறது. ரெய்னாவின் புகைப்படத்தை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் ‘புஷ்பா’படம் வெளியானது. இப்படம் பட்டித்தொட்டியெங்கும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்துள்ளது. இந்நிலையில், சுரேஷ் ரெய்னா, அல்லு அர்ஜுன் கெட்டப்பில் புகைப்படம் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்தப் புகைப்படத்தைப் பார்த்த அவரது ரசிகர்கள் அப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.
? है मैं ? You know what it is ? #funmodeon pic.twitter.com/Fdg70KMkxq
— Suresh Raina?? (@ImRaina) March 1, 2022