கிட்டாருடன் புஷ்பா பட "பங்காரமாயனே" பாட்டு பாடி அசத்திய கரூர் மாவட்ட ஆட்சியர் - வைரலாகும் வீடியோ

Songs viralvideo புஷ்பா Allu-Arjun வைரலாகும்வீடியோ Pushpa-Movie Karur-District-Collector பங்காரமாயனே கரூர்மாவட்டஆட்சியர்
By Nandhini Apr 08, 2022 09:47 AM GMT
Report

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் புஷ்பா திரைப்படம் வெளியானது. இப்படம் மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியிடப்பட்டது.

புஷ்பா திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் வெளியானது.

இப்படத்திற்கு எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கிறதோ, இல்லையோ, அந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள நடிகை சமந்தாவின் நடனமாடிய ஓ சொல்றியா மாமா… ஓஓ சொல்றியா மாமா… பாடல் பட்டித்தொட்டி எங்கும் ஒலித்து மாபெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், கிட்டார் இசைக்கருவியுடன் புஷ்பா படத்தில் இடம் பெற்ற ‘பங்காரமாயனே’ பாட்டை பாடி அசத்தியுள்ளார் கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர். தற்போது, இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இது குறித்து கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் கூறுகையில், எனக்கு தெலுங்கு பேச தெரியாது. நான் பாடியதில் ஏதாவது குறை இருந்தால் தெலுங்கு பாடகர்கள் மற்றும் தெலுங்கு பேசுவோர் பொறுத்துக்கொள்ளுங்கள் என்று டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் கரூர் மாவட்ட ஆட்சியருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.