குட்டை பாவாடை ... தாராளமான கவர்ச்சி ... சமந்தாவின் புது அவதாரம் - வைரல் வீடியோ
அல்லு அர்ஜூன் நடித்துள்ள புஷ்பா படத்தில் சமந்தா ஆடும் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் புஷ்பா படத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா,ஃபகத் பாசில் ஆகியோர் நடித்துள்ளனர். சுகுமார் இயக்கியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, என மொத்தம் ஐந்து மொழிகளில் உருவாகி உள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
புஷ்பா படம் முழுக்க முழுக்க செம்மரக்கடத்தல் மற்றும் அவர்களுடைய வாழ்க்கையை எடுத்துக் கூறும் வகையிலும் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராகவும், மரம் கடத்துபவராகவும் மிரட்டலான தோற்றத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. புஷ்பா படத்தின் முதல் பாகம் தான் டிசம்பர் 17 ல் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.புஷ்பா படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு சமந்தா குத்தாட்டம் போட்டுள்ளார் இதற்காக அவருக்கு ரூ.1.5 கோடி சம்பளாக கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த பாடல் காட்சி ஐதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் படமாக்கப்பட்டது. இதனிடையே படத்தின் புரோமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
புஷ்பா படத்தின் ட்ரெய்லர், வா சாமி பாடல் ஆகியவற்றை தொடர்ந்து நடிகை சமந்தா ஆடியுள்ள குத்துப்பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. இதில் சமந்தாவின் கவர்ச்சி புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது. திருமணத்திற்கு பின் அவரின் இந்த புதிய தோற்றத்தைக் கண்டு ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த திரையுலகமும் அதிர்ச்சியில் உள்ளது.