“புஷ்பான்னா உண்மையிலேயே ஃபயரு தான் போல” - 50 நாட்களில் இவ்வளவு கோடி வசூலா?
நடிகர் அல்லு அர்ஜூன் நடித்துள்ள புஷ்பா படம் 50 நாட்களை கடந்துள்ள நிலையில் வசூல் நிலவரம் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில், ஆகியோர் நடிப்பில் செம்மரக் கடத்தலை மையமாக வைத்து உருவாகியிருந்த படம் “புஷ்பா”. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்த இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகியிருந்தது. படத்தின் ஒரு பாடலுக்கு சமந்தா நடனமாடியிருந்தார்.
2 பாகங்களில் முதல் பாகமாக வெளிவந்த புஷ்பா தி ரைஸ் படம் கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. கிரிக்கெட் வீரர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பலரும் அல்லு அர்ஜூனின் வித்தியாசமான கதாபாத்திரத்தை இமிடேட் செய்து சமூகவலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டது ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.
50 நாட்களை கடந்துள்ள இப்படம் இன்னும் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் புஷ்பா படம் உலகளவில் ரூ.365 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.இதனை #50DaysForBlockbusterPushpa என்ற ஹேஷ்டேக்குடன் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.