புஷ்பா படத்தின் சண்டைக் காட்சி இணையத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி

Film Pushpa
By Thahir Aug 17, 2021 07:28 AM GMT
Report

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஐந்து மொழிகளில் அதிரடி கதைக்களத்துடன் இரண்டு பாகமாக உருவாகி வரும் ' புஷ்பா ' திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

சமீபத்தில் படத்தின் முதல் பாடலை படத்தின் இசையமைப்பாளரான தேவி ஸ்ரீ பிரசாத் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் வெளியீடு செய்திருந்தார்.

வெளியான மூன்று நாட்களில் இப்பாடல் 1.50 கோடி பார்வையாளர்களைக் கடந்து சென்றுகொண்டிருக்கிற நிலையில் கிருஸ்துமஸ் அன்று வெளியாகும் புஷ்பா திரைப்படத்தின் எடிட்டிங் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

புஷ்பா படத்தின் சண்டைக் காட்சி இணையத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி | Pushpa Film

இந்நிலையில் படத்தின் சில சண்டைக் காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுகுறித்து தயாரிப்பு நிர்வாகம் புலனாய்வுத் துறையில் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். எடிட்டிங் பணியின் போது காட்சிகளைத் திருடி இணையத்தில் வெளியிட்டவர்களை விரைவில் கைது செய்ய வேண்டும் எனவும் படத் தயாரிப்பாளர் காவல்துறையிடம் வலியுறுத்தியிருக்கிறார்.