இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள் இடையே தள்ளுமுள்ளு - பரபரப்பான மைதானம்..!

Pakistan India
By Thahir Jun 22, 2023 06:47 AM GMT
Report

கால்பந்து போட்டியின் போது இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாகிஸ்தான் வீரரை தடுத்த இந்திய பயிற்சியாளர் 

தெற்காசிய கால்பந்து போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டி பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டீரவா மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியின் 16வது நிமிடத்தில் இந்திய வீரர் சுனில் சேத்தரி 2 கோல் அடித்தார். இதன் மூலமாக இந்தியா  2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

Pushing between India and Pakistan players

தொடர்ந்து பாகிஸ்தான் வீரர்கள், கோல் அடிக்க விடாமல் தடுத்த போதும் இந்திய வீரர் சேத்தரி 2 கோல் அடித்தார்.

ஒரு கட்டத்தில் இந்திய வீரர் ப்ரீதம் கோட்டலுக்கு நடுவர் ஃபவுல் கொடுத்து பாகிஸ்தான் வீரர் அப்துல்லா இக்பாலை த்ரோ செய்ய அழைத்ததால் இந்திய பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் அவரை தடுத்தார்.

பாகிஸ்தான் - இந்தியா வீரர்கள் இடையே தள்ளுமுள்ளு

இதன் காரணமாக பாக் வீரர் மற்றும் பயிற்சியாளர் ஷாஜாத் அன்வர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து நடுவர் இந்திய பயிற்சியாளர் இகோர் ஸ்டிாக்கை உடனடியாக வெளியேற்றினார் எனவும்,

பாகிஸ்தான் பயிற்சியாளர் ஷாஜாத் அன்வருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் அவருக்கு எச்சரிக்கை       (மஞ்சள் அட்டை) மட்டுமே வழங்கப்பட்டது.

எனினும் சுனில் சேத்தரி அடுத்தடுத்து கோல் அடிக்கவே இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்தியா பாகிஸ்தான் வீரர்கள் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் மைதானத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.