போஸ்டர் விவகாரம் : தி.மு.க, பா.ஜ.க இடையே தள்ளுமுள்ளு , நள்ளிரவில் பதற்றமான கோவை
கோவை - அவிநாசி சாலையில் அமைந்துள்ள மேம்பாலத்துக்காக நூற்றுக்கும் மேற்பட்ட தூண்கள் கட்டப்பட்டுள்ளன. இந்தத் தூண்களில் அனைத்து கட்சியினர் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.
போஸ்டர் விவகாரம்
கோவையில் மேம்பாலங்களின் தூண்களில் போஸ்டர் ஒட்டக்கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில், கடந்த 10 நாட்களாக திமுகவினர் சார்பாக ஒட்டிய போஸ்டர்கள் அகற்றபடாமல் இருநத்தாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் போஸ்டர்கள் அகற்றப்படாததைக் கண்டித்து கோவை மாவட்ட பா.ஜ.கவினர் நேற்றிரவு 10 மணி முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
இதனை அறிந்த கோவை மாவட்ட போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பாலத்தின் தூண்களில் ஒட்டப்பட்டிருந்த தி.மு.க. போஸ்டர்களை கிழித்தெறிந்தும், அரசைக் கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.
கோவை அவினாசி சாலையில் மேம்பால தூண்களில் திமுக சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின் புகைபடத்துடன் ஒட்டப்பட்டு இருந்த சுவரொட்டிகளை பாஜகவினர் கிழித்து எறிந்து போராட்டம்.தடுக்க முயன்ற காவல் துறையினருக்கும் பா.ஜ.கவினருக்கும் இடையே தள்ளுமுள்ளால் பரபரப்பு. @News18TamilNadu pic.twitter.com/4T25QT2X6E
— Gurusamy (@gurusamymathi) August 11, 2022
தி.மு.க.வினர் மற்றும் பா.ஜ.க.வினரிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இதனால் போலீசாருக்கும், கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.போஸ்டர்களை கிழித்த பா.ஜ.க.வினரை போலீசார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.