தீப்பற்றி எரியும் இ-ஸ்கூட்டர்கள் - 2,000 வாகனங்களை திரும்ப பெறும் பிரபல நிறுவனம்
தங்களது நிறுவனத்தின் 2,000 இ-ஸ்கூட்டர்களை திரும்பப் பெறுவதாக ப்யூர் EV நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதை தொடர்ந்து மக்கள் மின்சார வாகனங்களை நோக்கி நகர தொடங்கியுள்ளனர். இவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வண்ணம் கடந்த மாதங்களில் மின்சார ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரியும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதில் சில உயிரிழப்புகளும் நிகழ்ந்ததால் வாடிக்கையாளர்கள் பலர் அதிருப்தியில் உள்ளனர். குறிப்பாக தங்களது நிறுவனத்தின் வாகனத்தில் தீப்பிடிக்கும் சம்பவம் பல முறை நடந்துவிட்டதால் முன்னணி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனங்களில் ஒன்றான பியூர் EV நிறுவனத்திற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் டீலர்கள் 20 பேர் தாங்கள் டீலர்ஷிப்பிலிருந்து விலகுவதாகவும் டெபாசிட் செய்த தொகையை திரும்பத் தருமாறும் கேட்டுள்ளனர். மேலும் தரத்தை பரிசோதனை செய்வதில் அரசு உடனடியாக தலையிட்டு இதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் தங்களது நிறுவனத்தின் 2,000 இ-ஸ்கூட்டர்களை திரும்பப் பெறுவதாக ப்யூர் EV நிறுவனம் அறிவித்துள்ளது. அதேசமயம் வாகனங்கள் மற்றும் பேட்டரிகள் அவற்றின் ஆரோக்கியத்திற்காக முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan