புரட்சி பாரதம் கட்சி - ஒடுக்கப்பட்டவர்களுக்காக தொடர்ந்து ஒலிக்குமா?
ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட இனமக்களின் உரிமைகளை பாதுகாத்திடவும், ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்திடவும்,டாக்டர் அம்பேத்கர் மன்றம் 1978 ஜனவரி 26-ல் பூவையில், பூவை.M. மூர்த்தியாரால் தொடங்கப்பட்டது.
புரட்சி பாரதம் கட்சி
டாக்டர் அம்பேத்கர் மன்றத்தின் வரலாறு என்பது முதலில் சென்னையில் உள்ள தலித் மக்களிடையே பகுத்தறிவு உண்டாக்கவும், அவர்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்கவும் உருவாக்கபட்ட ஒரு மன்றம்.
தென் தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தபட்ட மக்களின் அடிமைத்தனத்தை அகற்றி சமுதாயம், பொருளாதாரம், அரசியல் துறைகளில் அவர்கள் அதிக இடம் பெறவும், அரசு பதவிகளிலும் இயக்கங்களிலும் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை எதிர்க்கவும்,
பூவை.மூர்த்தியார்
பிராமணர் அல்லாதாரின்சமூக, பொருளாதார, அரசியல் நலன்களைப் பாதுகாப்பதே டாக்டர் அம்பேத்கர் மன்றத்தின் நோக்கமாக இருந்தது. மன்றம் தொடங்கிய சில மாதங்களில் அசுர வளர்ச்சி பெற்று சிரு இயக்கமாக இருந்தாலும்
பல ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தபட்ட மக்களின் ஆதரவுடன் பூவை ஒன்றிய டாக்டர் அம்பேத்கர் மன்றம் என்று பெயர் மாற்றபட்டது. பூவிருந்தவல்லி மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் பல தாழ்த்தப்பட்ட ஏழை மாணவர்கள் படிப்புக்காகவும், வேலை வாய்ப்புக்காகவும், உறுதுனையாய் நின்றது.
அம்பேத்கர் மன்றம்
அதன்பின், பல ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தபட்ட மக்களின் ஆதரவு பெருகவும், திருவள்ளுர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஆதரவு பெருகவே செங்கை மாவட்ட டாக்டர் அம்பேத்கர் மன்றம் என்று பெயர் மாற்றப்பட்டது.
சிறு சிறு குழுக்களாக செயல்பட்ட இயக்கம் பிறகு, பல போராட்டங்கள் நடத்தி, பல ஆதிக்க சமூகங்களின் எதிர்புகளை மீரி கற்பி, ஒன்று சேர், புரட்சி செய் என்ற கோட்பாடுகளோடு, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கொள்கைக்ளோடு அனைவருக்கும்
பூவை.ஜெகன்மூர்த்தி
பொதுவாக டாக்டர் அம்பேத்கர் மக்கள் விடுதலை முன்னனி (APLF – Ambedkar People Liberation Front) ஆக உருவெடுத்தது. பல கட்சியில் மேல் சமூகத்தினரின் ஆதிக்கத்திலும் அவர்களின் தீவிர மனுநீதி கோட்பாடுகளினாலும் பூவை.மூர்த்தியாரால்,
தலித் மற்றும் தாழ்த்தபட்ட மக்களின் உரிமைகளுக்கு போராட நமக்கும் அரசியல் உரிமையும் பங்கும் வேண்டும் என புரட்சி பாரதம் கட்சி (PBK) 1998ல் துவங்கப்பட்டது. பூவை.மூர்த்தியார் மறைவுக்கு பிறகு புரட்சிபாரதம் கட்சியின் தலைவராக பூவை.ஜெகன்மூர்த்தி இருந்து வருகிறார்.
மகளிர் மாநாடு
அதனையடுத்து கட்டாய மதமாற்றத் தடுப்புச் சட்டத்திற்கு எதிராக புரட்சிபாரதம் கட்சியின் சார்பாக தலைவர் ஜெகன் மூர்த்தியாரின் தலைமையில் மாபெரும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது.
தமிழைச் செம்மொழியாக்க பாடுபட்ட திமுக தலைவர் கருணாநிதிக்கு தமிழ் சிற்பி பட்டத்தை புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தியார் வழங்கினார். 2005ஆம் ஆண்டு சென்னை காமராஜர் அரங்கில் முதல் மகளிர் மாநாட்டை ஜெகன் மூர்த்தியார் தலைமையில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
திமுகவுடன் கூட்டணி
இதனையடுத்து, 2006ல் அவர் திமுகவுடன் கூட்டணி வைத்து, அரக்கோணம் தொகுதிக்கான தமிழக சட்டமன்றத்தில் போட்டியிட்டு தேர்தலில் வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து, அவரும் அவரது கட்சியும் 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவை ஆதரித்தன.
2021 தமிழ்நாடு தேர்தல்களில் அவர் அதிமுகவுடன் கூட்டணியைத் தொடர்ந்தார், மேலும் அவர் தமிழ்நாட்டின் கே. வி. குப்பம் தொகுதியில் போட்டியிட்டு தேர்தலில் வெற்றி பெற்றார்.
அதிமுக கூட்டணியில் வெற்றி
தற்போது அதிமுகவில் நடக்கும் உள்பூசலில், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அப்போது தான் அடுத்த தேர்தலில் அதிமுக ஆட்சியை பிடிக்க முடியும் எனவும் கணித்துள்ளார்.
ஏற்கனவே அதிமுகவிலிருந்து சிலர் விலகியிருப்பதால் தான், தமிழக சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சி ஆட்சியமைக்கும் வாய்ப்பை இழந்தது. சசிகலா இல்லாததால் தான் அதிமுக ஆட்சியை நழுவவிட்டதாக பூவை ஜெகன்மூர்த்தி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வாய்ப்பில்லை
தமிழகத்தில் எதிர்க்கட்சி என்ற இடத்தை திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகள் மட்டுமே அடைய முடியும் என்றும் மற்ற எந்தக் கட்சிக்கும் அதற்கு வாய்ப்பில்லை எனத் தெரிவித்துள்ளார்.
நாங்களும் எதிர்க்கட்சி என்று எந்தக் கட்சி வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம் என்றும் ஆனால் அது நடைமுறைக்கு சாத்தியமில்லை எனவும் பாஜகவை சூசகமாக தாக்கினார்.
சமத்துவம்
தமிழக அரசியலை பொறுத்தவரை மற்ற மாநிலங்களை காட்டிலும் தனித்துவமானது என்றும் இங்கு திராவிடக் கட்சிகளை மீறி தேசியக் கட்சிகளால் எதுவும் செய்ய முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
பாஜக தலைமையில் தமிழகத்தில் எந்தக் கட்சியும் கூட்டணி அமைக்க வாய்ப்பு குறைவு என்றும் திராவிடக் கட்சிகளுடன் வேண்டுமானால் பாஜக கூட்டணி வைத்துக்கொள்ளலாம் எனவும் பூவை ஜெகன்மூர்த்தி கூறியுள்ளார்.
இவ்வாறு அவ்வப்போது அரசியலில் தன் இருப்பை உறுதிசெய்து, முக்கிய பிரச்சனைகளில் குரல் கொடுத்து வருகிறார். மேலும் நாட்டை எந்த கட்சி ஆண்டாலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடுவதிலும் இன்றளவும் மும்முரம் செலுத்தி வருகிறார்.
சமத்துவம் பேசும் புரட்சி பாரதம் கட்சி தொடர்ந்து ஒடுக்கப்பட்டவர்களுக்காக ஒலிக்குமா என அக்கட்சியின் ஆதரவாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.