புரட்டாசி சனி.. திருப்பதி தரிசனம் - 8கி.மீக்கு க்யூ.. 48 மணி நேர காத்திருப்பு!

Festival Andhra Pradesh
By Sumathi Oct 08, 2022 05:56 AM GMT
Report

திருப்பதியில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

திருப்பதி தரிசனம்

புரட்டாசி மாத 3வது சனிக்கிழமையை முன்னிட்டு திருப்பதியில் ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் 48 மணி நேரம் காத்திருந்து இலவச தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் இலவச தரிசனத்திற்காக சுமார் 8 கிலோமீட்டர் தொலைவு வரை வரிசையில் பக்தர்கள் காத்திருக்கின்றனர்.

புரட்டாசி சனி.. திருப்பதி தரிசனம் - 8கி.மீக்கு க்யூ.. 48 மணி நேர காத்திருப்பு! | Puratasi Month Tirupati Devotees Waiting 48 Hours

மேலும், தங்கும் அறைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு அறைகள் கிடைக்காத பக்தர்கள் அவதி அடைந்து வருகின்றனர். அதிகபட்சமாக வினாடிக்கு ஒன்றரை நபர் என்ற கணக்கில் ஒரு மணி நேரத்தில் 4, 800 பக்தர்கள் மட்டுமே சாமி கும்பிட வசதிகள் உள்ளன.

 48 மணி நேரம்...

பக்தர்களுக்கு 15மணி நேரம் சாமி கும்பிட வாய்ப்பளித்தால் கூட, 75 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே சாமியை தரிசிக்க முடியும். ஆனால் பக்தர்கள் எண்ணிக்கை ஒன்றை லட்சத்துக்கு அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

புரட்டாசி சனி.. திருப்பதி தரிசனம் - 8கி.மீக்கு க்யூ.. 48 மணி நேர காத்திருப்பு! | Puratasi Month Tirupati Devotees Waiting 48 Hours

இதையடுத்து பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை தேவஸ்தானம் செய்து வருகிறது.