வீடு கட்ட குழி தோண்டும் போது அடித்த பேரதிஷ்டம் - திருவாரூரில் பரபரப்பு

By Nandhini May 24, 2022 06:47 AM GMT
Report

திருவாரூர் மாவட்டம், வலங்கைமானைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(55). இவர் ஆலங்குடி சந்தைவெளி பகுதியில் வீடு கட்டுவதற்காக கடந்த ஆண்டு இடம் வாங்கினார். அந்த இடத்தில் வீடு கட்டுவதற்காக பொக்லைன் இயந்திரம் உதவியுடன் தொழிலாளர்கள் பள்ளம் தோண்டினர்.

அப்போது அந்த பள்ளத்தில் 3 அடி உயர உலோக பாவை சிலை, ஒரு அடி உயர பெருமாள் சிலை, ஒரு பலிபீடம், திருவாச்சி, சிறிய அளவிலான கலயம் கிடைத்தது. இந்த கலயத்தில் ராமானுஜர் உள்ளிட்ட 9 மிகச்சிறிய அளவிலான சாமி சிலைகள் உள்ளிட்ட 24 பொருட்கள் இருந்தது.

மொத்தத்தில் சாமி சிலை உட்பட 30 பூஜை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது. 3 அடி உயர உலோக சிலையின் வலது பக்க கை உடைந்த நிலையில் காணப்பட்டது.

உடனடியாக இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசாரும், அதிகாரிகளும் விரைந்து வந்தனர். இந்தச் சிலைகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அந்த ஆய்வில், இச்சிலைகள் 13ம் நூற்றாண்டை சேர்ந்தவை என்றும், சிலைகள் அனைத்தும் ஐம்பொன்னால் ஆனவை என்றும் தகவல் தெரிவித்துள்ளனர். 

வீடு கட்ட குழி தோண்டும் போது அடித்த பேரதிஷ்டம் - திருவாரூரில் பரபரப்பு | Puppet Statue