கொடநாடு வழக்கு - சசிகலாவை தொடர்ந்து உதவியாளர் பூங்குன்றனிடம் தனிப்படை போலீசார் விசாரணை
கடந்த 2017 ஆம் ஆண்டு, நீலகிரி மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக இதுவரை 217 பேரிடம் காவல்துறையினர் விசாரித்துள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக கடந்த வாரம் சென்னை தி.நகரில் உள்ள வீட்டில் சசிகலாவிடம் மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் தலைமையிலான தனிப்படை 2 நாட்கள் விசாரணை மேற்கொண்டது.
சசிகலாவிடம் 2 நாட்களாக 10 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் தலைமையிலான தனிப்படை சசிகலாவிடம் துருவி, துருவி கேள்விகள் கேட்டு வாக்குமூலம் பெற்றதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், தற்போது கோயம்புத்தூரில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றனிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.